உள்ளூர் செய்திகள்
கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த காட்சி.
பொதுமக்களிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., குறை கேட்பு
- அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணிகளை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
- பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி மாநகராட்சி வார்டு எண்- 4 ஜெயா நகர் மற்றும் பாரதி நகர் அப்பார்ட்மெண்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் புதுப்பித்தல் பணிகளை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார். அப்போது பகுதி செயலாளர் பட்டுலிங்கம், கவுன்சிலர் எஸ். எம். எஸ் .துரை, பகுதி துணை செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் ஆனந்தகோபால், சிவராமன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.