உள்ளூர் செய்திகள்

கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்ட காட்சி.

பல்லடம் பேக்கரி, ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வில் 72 கிலோ காலாவதியான பொருட்கள் பறிமுதல்

Published On 2022-10-01 08:05 GMT   |   Update On 2022-10-01 08:05 GMT
  • உணவகம், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
  • உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

பல்லடம் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு உணவகம், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல்லடம் என்.ஜி.ஆர். சாலை, திருச்சி சாலை, பஸ் நிலையம் பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிம்பிகை தலைமையில் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 67 கிலோ திண்பண்டங்கள், 5 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக் வைத்திருந்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அந்தக் கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகள் மீது சரியான தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் பாக்கெட்டின் மேற்புரத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவு தரம் மற்றும் கலப்படம் குறித்த புகார்களுக்கு வாட்ஸ்அப் 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையின் இந்த வாட்ஸ்அப் எண்ணை அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News