உள்ளூர் செய்திகள்
தொரப்பாடி பேரூராட்சி தி.மு.க. செயலாளருக்கு கொலை மிரட்டல்
- சுந்தர வடிவேலை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தொரப்பாடி பேரூராட்சி தி.மு.க. செயலாளர் சுந்தரவடிவேல் (52). இவர் தொரப்பாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருவழி பாதையாகமாற்றபேரூராட்சிமன்றதீர்மானத்தின்படிவேலிஅமைத்துள்ளார். அப்போது பேரூராட்சி உள்ளே கடைவைத்திருக்கும் அன்பழகன், அவரது மனைவி ஜெயந்தி, அவரது மகன்தேவானந்த் ஆகியோர் வேலியை உடைத்து அங்கிருந்த பேனரை கிழித்து சுந்தர வடிவேலை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல்விடுத்ததாககூறப்படுகிறது. இது தொடர்பாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.