உள்ளூர் செய்திகள்

மனு அளித்த நிர்வாகிகளை படத்தில் காணலாம்.

நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவில் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்- கலெக்டரிடம், இந்து மக்கள் கட்சியினர் மனு

Published On 2023-10-03 08:57 GMT   |   Update On 2023-10-03 08:57 GMT
  • நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது.
  • டாஸ்மாக் கடை பக்கத்திலேயே ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் நெல்லை உடையார் தலைமையில் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். அதில் கூறி யிருப்பதாவது:-

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது. இதன் முன்பு மீனாட்சிபுரம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் இந்த கடையை உடனடியாக அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக அந்த கடையை அப்புறப்பத்த வேண்டும்.

இதன் பக்கத்திலேயே பாரதியார் படித்த ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதன் அருகிலேயே நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. மேலும் பெருமாள் கோவிலும் இதன் அருகே இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது குடிமகன்கள் சாலைகளில் வீசி செல்லும் மது பாட்டில்கள் காலில் காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இது தொடர்பாக பல முறை மனு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மனுவை விசாரித்து உடனடியாக டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

அப்போது தொழிற்சங்க தலைவர் மாயாண்டி, தொழிற்சங்க செயலாளர் நாகராஜன், கார்த்தீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News