தமிழ்நாடு செய்திகள்

உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published On 2025-12-26 11:29 IST   |   Update On 2025-12-26 11:29:00 IST
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்டங்களை தொடங்கி வைத்து பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்டங்களை தொடங்கி வைத்து பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உளுந்தூர்பேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ஆய்வு செய்தார்.

உளுந்தூர்பேட்டையில் ரூ.1350 கோடி மதிப்பீட்டில் 200 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் காலணி தொழிற்சாலை கட்டுமான பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Tags:    

Similar News