மாநில அரசுகளுடன் மத்திய அரசு மோதல் போக்கை கடைபிடித்தால் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்?- ப.சிதம்பரம்
- பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களோடு மத்திய பாரதிய ஜனதா அரசு மோதிக்கொண்டே இருந்தால் மோதல் தான்.
- நாள்தோறும் மோதல் என்றால் எப்படி இந்த மாநிலங்களில் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
வில்லிவாக்கம்:
சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் வே.வாசு தலைமையில் அயனாவரத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ப.சிதம்பரம், சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் கே.பாலபாரதி, வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. வெற்றி அழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-
அரசியல் சாசனத்தை படித்தவர்கள் இந்தியாவை இந்திய யூனியன் என்று சொன்னார்கள், மத்திய அரசு இருக்கும். மாநில அரசுகளும் இருக்கும். மத்திய அரசுக்கு மாநில அரசு குறைந்த அரசு அல்ல. சளைத்த அரசு அல்ல.
குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களோடு மத்திய பாரதிய ஜனதா அரசு மோதிக்கொண்டே இருந்தால் மோதல் தான். நாள்தோறும் மோதல் என்றால் எப்படி இந்த மாநிலங்களில் திட்டங்களை நிறைவேற்ற முடியும். இன்றைக்கு அதன் காரணமாகவே பல வகையிலே தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் பல புறக்கணிக்கப்படுகின்றன. பா.ஜனதா அல்லாத அரசுகளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் பல மாநிலங்களின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.