உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசியவர் கைது

Published On 2022-11-12 12:45 IST   |   Update On 2022-11-12 12:45:00 IST
  • பல்லடத்தில் இருந்த சைபர் கிரைம் ஏட்டு சிவா மற்றும் மாதவன் ஆகியோர் செல்போனில் பேசிய நபரை கையும் களவுமாக கைது செய்தனர்.
  • விசாரணையில் சிதம்பரத்தைச் சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் ஜெயா நகரைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி கல்பனா (32). இவருக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வந்த செல்போன் அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியுள்ளார்.

அப்போது அந்த நபர் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்பனா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீசிலும் புகார் கொடுத்தார்.

விசாரணையில் ஆபாசமாக பேசியவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்பிரபாகர் தாஸ் ஏற்பாட்டில் வேறொரு எண்ணில் இருந்து கல்பனாவை அவரது சகோதரி போல் பேச வைத்துள்ளனர்.

அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு கொடுத்துக் கொண்டே அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர். அப்போது பல்லடத்தில் இருந்த சைபர் கிரைம் ஏட்டு சிவா மற்றும் மாதவன் ஆகியோர் செல்போனில் பேசிய நபரை கையும் களவுமாக கைது செய்தனர்.

விசாரணையில் அவர் சிதம்பரத்தைச் சேர்ந்த சிவா (42) என்பது தெரியவந்தது. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சுவீட் கடையில் வேலை பார்ப்பதும், உறவினர் வாங்கிக் கொடுத்த செல்போன் மூலம் ஏதாவது ஒரு எண்ணில் பேசுவதும், அதில் பெண் குரல் கேட்டால் அவர்களிடம் ஆபாசமாக பேசுவதும் வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து செல்போனை பறிமுதல் செய்த சைபர் கிரைம் போலீசார் சிவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News