உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் ஜிம் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை புலிக்குகை அருகே உள்ள பஸ் நிறுத்தம் அருகில் சஞ்சய்குமார் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாமல்லபுரம்:
திருவள்ளுர் அடுத்த ஆமூரைச் சேர்ந்த ஏசுநாதன் என்பவரது மகன் சஞ்சய்குமார் (வயது27) திருமணம் ஆகாதவர். மாமல்லபுரத்தில் ஜிம் நடத்தி வந்தார். கடன் பிரச்சனையால் மன உளச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை புலிக்குகை அருகே உள்ள பஸ் நிறுத்தம் அருகில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சஞ்சய்குமார் கடன் பிரச்சனையால் தான் தற்கொலை செய்தாரா? அல்லது ஏதேனும் பெண்கள் விவகாரமா? என்ற கோணத்தில் மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.