மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
- அந்தோணி ராஜூக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
- அந்தோணி ராஜ் நேற்று குடித்துவிட்டு வந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து ஆரோக்கியம்மாள் அதே அந்தோனியார்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு காலை சென்றுள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மப்பேடு அந்தோனியார் புரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (37). பெயிண்டர். இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (30). இவர்களுக்கு சஞ்சனா (9), யஸ்வந்த் (7) எனஇரண்டு குழந்தைகள் உள்ளன.
அந்தோணி ராஜூக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்தோணி ராஜ் குடித்துவிட்டு வந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து ஆரோக்கியம்மாள் அதே அந்தோனியார்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு காலை சென்றுள்ளார்.
மீண்டும் இரவு 7.30 மணி அளவில் வந்து பார்த்தபோது வீட்டில் உள்புறம் தாழ்ப்பால் போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியம்மாள் அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உத்திரத்தில் கணவன் அந்தோணி ராஜ் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு சுங்குவார்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். ஆனால் ஏற்கனவே அந்தோணி ராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து மப்பேடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.