உள்ளூர் செய்திகள்

நில புரோக்கர் கடத்தல்- தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மகன் கைது

Published On 2023-02-11 14:56 IST   |   Update On 2023-02-11 14:56:00 IST
  • பாபு வரட்டனப்பள்ளி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
  • இனோவா காரில் வந்த கும்பல் பாபுவை வழிமறித்தது.

வானூர்:

விழுப்புரம் அருகே வானூர் போலீஸ் சரகம் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுலோசனா. இவர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது மகன் சக்திவேல் (வயது 43). இவர் பல்வேறு இடங்களில் பணம்-கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் தந்திகுப்பம் போலீஸ் சரகம் பாலேபள்ளியை சேர்ந்த நிலப்புரோக்கர் பாபு என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் கொடுத்து உள்ளார்.

அதன்பின்னர் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் சக்திவேலுவுக்கும், பாபுவுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது.

இந்த நிலையில் நேற்று காலை பாபு வரட்டனப்பள்ளி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இனோவா காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் நிலப்புரோக்கர் பாபுவை காரில் கடத்தி சென்றது.

இதுகுறித்து பாபுவின் மனைவி ராஜேஸ்வரி தந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அந்த மனுவில், தனது கணவரை கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் உள்பட சிலரை தேடினர். அப்போது சக்திவேல் வைத்திருந்த செல்போன் மூலம் துப்பு துலக்கினர். அந்த செல்போன் டவர் வானூர் அருகே திருச்சிற்றம்பலம்கூட்டு ரோட்டில் சக்திவேல் இருப்பதை காட்டியது.

இதனை தொடர்ந்து தந்திகுப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சக்திவேலை சுற்றி வளைத்து கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து போலீசார் சக்திவேலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News