அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம்: ஆந்திர மாநில ஆசாமி கைது-பெண் மீது வழக்கு
- பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓசூர் வைஷ்ணவி நகர் பகுதியிலும், மாருதி நகர் பகுதியிலும் செயல்பட்டு வரும் 2 அழகு நிலையங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அழகு நிலையங்களை நடத்தி வந்த ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்பவரை போலீசார் அவரை கைது செய்தனர்.
பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா (32) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.