உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல், கொசவபட்டியில் நாளை மின்தடை

Published On 2026-02-20 17:15 IST   |   Update On 2026-02-20 17:15:00 IST
  • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
  • விராலிபட்டி, நொக்கியோடைபட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி,

திண்டுக்கல்:

திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல் கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கொசவபட்டி, செம்மடைப்பட்டி கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொக்கியோடைபட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கவராயபட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் மின்பகிர்மான செயற்பொறியாளர் பிரகதீஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News