உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே ஓய்வு பெற்ற சப் -இன்ஸ்பெக்டர், வார்டு உறுப்பினர் திடீர் மோதல்

Published On 2022-09-23 07:55 GMT   |   Update On 2022-09-23 07:55 GMT
  • பள்ளம் தோண்டி குடிநீர் பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
  • மஞ்சினி மற்றும் வார்டு உறுப்பினர் மலர்விழி ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய கங்காணங்குப்பம் ஊராட்சி வார்டு உறுப்பினராக மலர்விழி இருந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் என்பவர் வீட்டின் முன்பு பள்ளம் தோண்டி குடிநீர் பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் எதற்காக இங்கு பள்ளம் தோண்டுகிறீர்கள் ? என கேட்ட போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இந்த மோதலில் வார்டு உறுப்பினர் மலர்விழி, அவரது கணவர் மஞ்சினி, ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் மஞ்சினி கொடுத்த புகாரின் பேரில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மீதும், ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மஞ்சினி மற்றும் வார்டு உறுப்பினர் மலர்விழி ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News