களக்காடு அருகே லாரி மோதி மாணவர் படுகாயம்
- மைக்கேல் அந்தோணி லூசியன் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
- லாரி மோதியதில் மைக்கேல் அந்தோணி லூசியன் படுகாயம் அடைந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தியை சேர்ந்த மைக்கேல் கிராண்ட் துரை மகன் மைக்கேல் அந்தோணி லூசியன் (வயது 22). இவர் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். பொத்தைசுத்தி செங்கல்சூளை அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியை மைக்கேல் அந்தோணி லூசியன் முந்தி செல்ல முயற்சி செய்தார்.
அப்போது திடீர் என லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மைக்கேல் அந்தோணி லூசியன் படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த வாகைகுளத்தை சேர்ந்த கந்தையா (54) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.