உள்ளூர் செய்திகள்

மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் உள்ள மாதிரி கலைஞர் நினைவாலயத்தில் சபாநாயகர் அப்பாவு மரியாதை செலுத்திய காட்சி. 

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாதிரி கலைஞர் நினைவாலயத்தில் சபாநாயகர் அப்பாவு மரியாதை

Published On 2023-08-07 14:43 IST   |   Update On 2023-08-07 14:43:00 IST
  • நினைவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • நிகழ்ச்சியின்போது சபாநாயகர் அப்பாவு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நெல்லை:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் சென்னையில் அமைக்கப் பட்டுள்ளது போன்று மாதிரி கலைஞர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அதேபோல் வெயிலுக்கு இதமாக சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு கலைஞர் மாதிரி நினைவாலயத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மேயர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் அண்டன் செல்லத்துரை, தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் நித்திய பாலையா, வில்சன் மணித்துரை, பவுல்ராஜ், சுந்தர், கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் மாயா, முன்னாள் கவுன்சிலர் நவநீதன் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகராஜா, வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். அப்போது நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளிக்கையில், இதுதொடர்பாக ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் பேசி உள்ளேன். அவரும் அதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகிறார். விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்றார்.

Tags:    

Similar News