உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்

Published On 2023-06-19 13:51 IST   |   Update On 2023-06-19 13:51:00 IST
  • மோட்டார் சைக்கிள்-வேன் மோதியதில் டீ கடைக்காரர் படுகாயமடைந்தார்.
  • நத்தம் மதுக்கரையை சேர்ந்த டிரைவர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூரை அடுத்துள்ள கணபதிபட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகன் பாண்டியன்(வயது19). இவர் நாகமங்கலத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் கடையில் இருந்து வீட்டிற்கு சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றார். நாகமங்கலம் நாடகமேடை அருகே சென்றபோது அங்குள்ள வளைவில் வேகமாக வந்த வேனும், மோட்டார் சைக்கிலும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த பாண்டியன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புழுதிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த நத்தம் மதுக்கரையை சேர்ந்த டிரைவர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News