தமிழ்நாடு செய்திகள்

234 தொகுதிகளுக்கு தி.மு.க.வில் போட்டியிட 3 ஆயிரம் பேர் விருப்ப மனு- அண்ணா அறிவாலயத்தில் திருவிழா கூட்டம்

Published On 2026-02-28 10:20 IST   |   Update On 2026-02-28 10:20:00 IST
  • தற்போது விருப்ப மனுக்களைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது.
  • விருப்ப மனு விநியோகம் வருகிற மார்ச் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.

9-வது நாளாக இன்று தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.

9-வது நாளான இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, கழக அமைப்பு துணை செயலாளர் ஆஸ்மன், அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபன் ஆகியோர் பெற்றனர். அப்போது கழகத்தினர் ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

தற்போது விருப்ப மனுக்களைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது. இதே போன்று, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து திரண்டு விருப்ப மனுக்களை வாங்கிச் செல்கின்றனர்.

தி.மு.க.வில் போட்டியிட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் திருவிழா போல் கூட்டம் காணப்படுகிறது. விருப்ப மனு விநியோகம் வருகிற மார்ச் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News