உள்ளூர் செய்திகள்

பைக்காரா படகு இல்லத்தில் வாகனம் நிறுத்த இடம் தேர்வு- சுற்றுலா அதிகாரிகள் நேரடி ஆய்வு

Published On 2023-07-08 14:41 IST   |   Update On 2023-07-08 14:41:00 IST
  • கூடலூர் படகு இல்லம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு செல்ல நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
  • கூடலூர் படகு இல்லம் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

கூடலூர் பைக்காரா படகு இல்லத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. எனவே அங்கு வாகன நிறுத்துமிடம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன்ஒருபகுதியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர், சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் யுவராஜ், தாசில்தார் மணி மேகலை ஆகியோர் அடங்கிய குழுவினர் பைக்காரா படகு இல்லத்துக்கு வந்திருந்தனர். அப்போது வாகனம் நிறுத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது.

இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், பைக்காரா படகு இல்லத்தில் முதல் கட்டமாக இடம் கேட்டு வனத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் ஒப்புதல் தந்தவுடன், அதற்கான தொகை ஒதுக்கப்பட்டு, அடுத்த கட்டமாக எத்தனை வாகனங்கள் நிறுத்துவது என்பவை உள்ளிட்ட பணிகள் நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.

கூடலூர் படகு இல்லம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு செல்ல நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் இந்த சாலை குண்டும், குழியுமாக சிதலம் அடைந்து உள்ளது. இதற்காக சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே கூடலூர் படகு இல்லம் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News