உள்ளூர் செய்திகள்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி

Published On 2023-08-09 14:56 IST   |   Update On 2023-08-09 14:56:00 IST
  • கடந்த 7ந்தேதி முதல் வருகிற 22ந்தேதிவரை பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
  • மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுவை வலுப்படுத்தவும், அரசு பள்ளி குழந்தைகளின் தரமான கல்வியை உறுதிசெய்யவும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கடந்த 7ந்தேதி முதல் வருகிற 22ந்தேதிவரை பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளை சேர்ந்த 198 உறுப்பினர்கள் மற்றும் 33 பேரூராட்சிகளை சேர்ந்த 513 உறுப்பினர்கள் ஆகியோருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்ஒருபகுதியாக கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கருத்தாளர்களான ஆசிரியர்கள் சுபிதா, ரம்யா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரியா, பிரேமா ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

அப்போது மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி தர வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்.

Tags:    

Similar News