உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பெண்ணிடம் எழுந்து சென்று குறைகளை கேட்டறிந்தார்.

திருவாரூரில் நடந்த பெட்டிசன் மேளாவில் பெண்ணிடம் எழுந்து சென்று குறைகளை கேட்ட எஸ்.பி.

Published On 2023-03-24 13:49 IST   |   Update On 2023-03-24 13:49:00 IST
  • காலில் கட்டுடன் வந்து அமர்ந்திருந்த பெண்ணிடம் எழுந்து சென்று குறைகளை கேட்டறிந்தார்.
  • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பெட்டிசன்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில் பெட்டிசன் மேளா நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பெட்டிசன்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

அப்போது, கால் உடைந்த நிலையில் காலில் கட்டுடன் வந்து அமர்ந்திருந்த பெண்ணிடம் எழுந்து சென்று போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் குறைகளை கேட்டறிந்தார்.

இது பொதுமக்களின் மனதில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் மனித நேயத்தையும், பெருந்தன்மையையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News