உள்ளூர் செய்திகள்
கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளா்கள் போராட்டம்
- தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- அதிகாரிகள் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூா் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அரசு நிா்ணயித்த ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு மீண்டும் பணியாணை வழங்க கூடாது என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமையில் நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா் உள்ளிட்ட அதிகாரிகள், தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, உங்களின் பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து தா்ணாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.