உள்ளூர் செய்திகள்

மணக்காடு காமராசர் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட காட்சி. அருகில் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்பட பலர் உள்ளனர்.

காமராசர் நகரவை பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்

Published On 2023-09-04 13:46 IST   |   Update On 2023-09-04 13:46:00 IST
  • சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.
  • சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்ததாவது:-

உறுதிமொழி

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 1,772 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

சுகாதாரமான சூழல்

அரசுப் பள்ளியில் பயிலும் ஒவ்வொருவரும் உங்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம்

செலுத்திட வேண்டும். பள்ளி வயது பருவத்திலேயே தன் சுத்தம், உடல்நலம், சுற்றுச் சூழல் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயலாற்றிட வழிவகுக்கும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற செயல்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கல்வி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தித் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறது.

பள்ளி மாணவர்களும் கூட்டு முயற்சியுடன் ஒவ்வொரு பள்ளியையும் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக திகழச் செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகள் கலெக்டர் முன்னிலையில் நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாமன்ற உறுப்பினர் சங்கீதா நீதிவர்மன், தலைமை ஆசிரியை அனந்த லட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News