உள்ளூர் செய்திகள்

மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய சதாசிவம் எம்.எல்.ஏ.

கொளத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்

Published On 2023-07-28 07:34 GMT   |   Update On 2023-07-28 07:34 GMT
  • கோவிந்தபாடி, கருங்கல்லூர், பண்ணவாடி, செட்டிபட்டி, கத்திரி பட்டி, கோட்டையூர் ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.
  • தனியார் வேளாண் நர்சரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மிளகாய் பயிர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் கொளத்தூர் கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலையில் 100- கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் மிளகாய் செடிகளு டன் மறியலில் ஈடுபட்டனர்.

மேட்டூர்:

கொளத்தூர் ஒன்றியத்தில் மிளகாய் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.

மிளகாய் சாகுபடி

கோவிந்தபாடி, கருங்கல்லூர், பண்ணவாடி, செட்டிபட்டி, கத்திரி பட்டி, கோட்டையூர் ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர். பயிர் செய்து 3 மாதத்தில் மிளகாய் அறுவடை செய்யலாம், முதல் இரண்டு மாதத்தில் பச்சை மிளகாயாகவும், அடுத்து பழுத்த மிளகாய் அறுவடை செய்யப்படும்.

இந்நிலையில் மூன்று மாதத்திற்கு மேலாகியும் செடிகளில் மிளகாய் காய்க்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதனை அடுத்து மிளகாய் நாற்று விற்பனை செய்த தனியார் வேளாண் நர்ச ரியை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

மறியல்

தனியார் வேளாண் நர்சரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மிளகாய் பயிர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் கொளத்தூர்

கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலையில் 100- கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் மிளகாய் செடிகளு டன் மறியலில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

பேச்சு வார்த்தை

இதுபற்றி தெரிவித்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் எம்.எல்.ஏ., விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.மேலும் அரசு அதிகாரிகளிடம் உடனே பொது மக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

Tags:    

Similar News