உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்
- சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர்
- ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஏற்காடு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டும், தபால் அலுவலக சாலையில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஏற்காடு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டும், தபால் அலுவலக சாலையில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானசவுந்தரி போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, விலைவாசி உயர்ந்து நிற்கிறது. வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் அவதிபடுகின்றனர். எனவே இந்த மக்கள் விரோத அரசை விரைவில் நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். இந்த போராட்டதில் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, தில்லைக்கரசி, மூர்த்தி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.