உள்ளூர் செய்திகள்

போராட்டம் நடத்த முயன்ற 7 விவசாயிகள் சஸ்பெண்டு

Published On 2023-08-31 14:57 IST   |   Update On 2023-08-31 14:57:00 IST
  • சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் ஒரு சிலர் வெளி யில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து உள்ளே சந்தையில் வைத்து வியாபாரம் செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • துண்டு பிரசுரங்களை வழங்கி மற்ற விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபட தூண்டினர். \

அன்னதானப்பட்டி:

சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் ஒரு சில நபர்களின் தலை யீட்டால் விவசாயிகள் கொண்டு வரும் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது குறித்து விவசா யிகள் உழவர் சந்தை அதிகாரி களிடம் அவ்வப்போது புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் ஒரு சிலர் வெளி யில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து உள்ளே சந்தையில் வைத்து வியாபாரம் செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

7 பேர் சஸ்பெண்டு

அப்போது சிலர் வெளியில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து உழவர் சந்தையில் கடை வைத்து வியாபாரம் செய்ததா கவும், உழவர் சந்தை முன்பு காய்கறிகளை கொட்டி தன்னிச்சையாக விற்பனை செய்ததாகவும் கூறி இதில் தொடர்புடைய 7 பேரை 30 நாட்கள் விற்பனை செய்ய உழவர் சந்தை நிர்வாகம் தடை விதித்தது.

போராட்டம்

இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் சில விவசாயிகள் நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதுடன், துண்டு பிரசுரங்களை வழங்கி மற்ற

விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபட தூண்டினர். \இதையடுத்து அவர்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வயலாய்வு செய்து, வயலாய்வு ஆய்வ றிக்கையின்படி அவர்கள் மீண்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த சீசனில் தேவையான காய்கறிகள், பழங்கள் கிடைக்காவிட்டால், பக்கத்து மாவட்டங்களில் அதிக விளைச்சல் இருக்கும் போது இ.நாம் திட்டத்தின் மூலம் தேவைப்படும் மாவட்டங்களுக்கு காய்கறி களை கொண்டு வந்து உழவர் சந்தைகளில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் காய்கறிகள் சேதம் ஆவதை தடுக்க முடியும். மேலும் விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படாது.

நடவடிக்கை

இந்த திட்டத்தில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை வாங்கி அதிக விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்ற னர்.இதுகுறித்து கேட்ட தற்காகவே விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

இந்த நிலையில் வேளாண் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை கண்டித்து தமிழக விவசாய சங்கம் சார்பில் இன்று நாட்டாமை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார்.

மாநில பொது செயலாளர் பழனி முருகன் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News