உள்ளூர் செய்திகள் (District)

சேலம் லாரி மார்க்கெட் அருகே கடைகளுக்குள் புகுந்த சாக்கடை கழிவுநீர்

Published On 2023-09-01 09:46 GMT   |   Update On 2023-09-01 09:46 GMT
  • கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர்.
  • தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

சேலம்:

சேலம் லாரி மார்க்கெட் அருகே உள்ள மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

சேலம் மாநகரில் கனமழை பெய்யும் போது அரிசிபாளையம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த பகுதியில் அதிகளவில் தேங்குகிறது.

இதனால் அங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் கடை உரிமையாளர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் பங்கஜ் என்பவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய்களை தூர்வாராததால் அரிசிபாளையம் பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் எங்களது கடைக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் கடையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வீணாகி சேதமாகிறது. தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதே நிலை தொடர்ந்தால் விரைவில் மாநகராட்சி அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் தண்ணீர் தேங்கா தவாறு சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News