உள்ளூர் செய்திகள்

செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன்

சேலம் - நாமக்கல் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு முதல்-அமைச்சரின் அண்ணா விருது

Published On 2023-09-16 08:03 GMT   |   Update On 2023-09-16 08:03 GMT
  • போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

சேலம்:

தமிழக அரசின் சார்பில் போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சேலம் மாநகரம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலாவிற்கு அண்ணா விருதுடன், ரூ.10 ஆயிரம் வெகுமதியும், சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதுடன் ரூ.5 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்படுகிறது.

இதேபோல் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள் முருகன் மற்றும் காளியப்பன் ஆகியோருக்கும் அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

Tags:    

Similar News