ேராட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கனரக வாகனங்கள்.
மேட்டூரில் சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
- அனல் மின் நிலையத்திற்கு வரும் லாரிகள் பவானி செல்லும் சாலையில் 4 ரோடு பேருந்து நிறுத்தம் முதல் மாதையன்குட்டை வரை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
- இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.
மேட்டூர்:
மேட்டூரில் அனல் மின் நிலைய தொழிற்சாலையில் நிலக்கரி எரிப்பதன் மூலம் வெளியேறும் சாம்பல் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அனல் மின் நிலையத்திற்கு வரும் லாரிகள் பவானி செல்லும் சாலையில் 4 ரோடு பேருந்து நிறுத்தம் முதல் மாதையன்குட்டை வரை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இங்கு லாரி பழுது நீக்கும் பட்டறைகளும், உணவகங்களும் உள்ளதால் சாலையோரத்தில் ஓட்டுனர்கள் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர் . இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.
இப்பகுதியில் அரசு தொழில் பயிற்சி நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். விபத்து ஏற்படும் போது மட்டும் லாரிகள் மீது அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மற்ற நேரங்களில் வாகன தணிக்கை என்ற பெயரில் அபராதம் விதிப்பதிலேயே போலீசார் குறியாக செயல்படுகின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.