உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் பேசிய காட்சி.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வழக்குபதிவு செய்வதை நிறுத்த வேண்டும்: வி.சி.க. கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-04-11 11:13 IST   |   Update On 2023-04-11 11:13:00 IST
  • செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடி கருமாச்சிபாளையத்தில் நடைபெற்றது.
  • சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கடலூர் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்

கடலூர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடி கருமாச்சிபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கடலூர் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நகர செயலாளர் அம்பேத் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, பாலமுருகன், வீரபாபு, வரதராஜன், சேகர், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜான்சன், முரளி, சுந்தர், கௌசல்யா, நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஏப்ரல் 14-ந்தேதி கடலூரில் நடைபெறும் ஜனநாயகம் காப்போம் பேரணியில் பெருந்திரளாக பங்கேற்பது குறிஞ்சிப்பாடி பகுதியில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது 110-ன் கீழ் வழக்குபதிவு செய்வதை போலீசார் நிறுத்த வேண்டும். சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News