உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்ற கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகளுடன், நகர் மன்ற தலைவர் நாசர்கான், நகர் மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியைகள் உள்ளனர்.

விழிப்புணர்வு போட்டி

Published On 2022-07-16 09:00 GMT   |   Update On 2022-07-16 09:00 GMT
  • ராமேசுவரத்தில் நடந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
  • ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடந்தன.

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு 'என் குப்பை என் பொறுப்பு' என்ற பெயரில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ராமேசுவரம் நகராட்சி முழுவதும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் நகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் ராமேசுவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாக சார்பில் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான் மற்றும் நகர் மன்ற துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News