GOLD PRICE TODAY : வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம்
- அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவால், தங்கம் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காணுகிறது.
- தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (நவம்பர்) வரை சற்று குறைந்திருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தையும், ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் விலை அதிகரிக்கத்தான் செய்யும் என பேசப்பட்ட சூழலில், அடுத்த நாளே விலை 'மளமள'வென சரிந்து காணப்பட்டது. பின்னர் மீண்டும் கொஞ்சம், கொஞ்சமாக உயரத் தொடங்கியது.
இப்படியாக விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம், பிற்பகல் நிலவரப்படி, மேலும் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனை ஆனது. ஏற்கனவே தங்கம் விலை கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,00,120-க்கு விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. தற்போது அந்த விலையையும் 'ஓவர்டேக்' செய்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், பெருமுதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தையே சார்ந்து இருப்பது, போர் பதற்றச் சூழல் இன்னும் சில நாடுகளில் முடிவுக்கு வராதது உள்ளிட்ட காரணங்கள் முக்கியமானவையாக சொல்லப்படுகிறது.
அதிலும் சமீபத்தில் அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவால், தங்கம் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காணுகிறது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,160-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அந்த வகையில் இன்று வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 234 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560
21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040
18-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
22-12-2025- ஒரு கிராம் ரூ.231
21-12-2025- ஒரு கிராம் ரூ.226
20-12-2025- ஒரு கிராம் ரூ.226
19-12-2025- ஒரு கிராம் ரூ.221
18-12-2025- ஒரு கிராம் ரூ.224