உள்ளூர் செய்திகள்

மரத்தில் கார் மோதி 2 பேர் பலி

Published On 2022-10-12 14:37 IST   |   Update On 2022-10-12 14:37:00 IST
  • மரத்தில் கார் மோதி 2 பேர் பலியாகினர்
  • டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள அகரபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கபடி வீரர் சேகர்(வயது 42), இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த திருப்பதி(30), சரவணன் (36), மதி(35), ஆனந்த் (37), வெள்ளைச்சாமி (33), மாரிமுத்து, கண்ணன் ஆகிய 8 பேர் ஒரு காரில் விராலிமலை வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கார் சாங்கிராபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் காயமடைந்தவர்கள் மணப்பாறை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இது குறித்து தகவலறிந்த இலுப்பூர் போலீசார் நிகழ்விடம் சென்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News