உள்ளூர் செய்திகள்

கடலூர் தாழங்குடாவில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை செய்த போது எடுத்த படம்.

கடலூர் தாழங்குடாவில் வீடு, வீடாக போலீசார் சோதனை

Published On 2023-10-31 14:35 IST   |   Update On 2023-10-31 14:35:00 IST
  • சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • சில வருடங்களில் தேர்தல் முன்விரோத தகராறில் பழிக்கு பழியாக2 கொலைகள் நடைபெற்று உள்ளது.

கடலூர்:

தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளை சோதனை செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் போலீசார் இன்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆயுதம் பதுக்கி வைத்துள்ளார்களா? குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு உள்ளார்கள்? தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் பகுதியில் கடந்த சில வருடங்களில் தேர்தல் முன்விரோத தகராறில் பழிக்கு பழியாக2 கொலைகள் நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையி ல்கடலூர் தாழங்குடா மற்றும் தேவனாம்பட்டினம் பகுதியில் 40 வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடியாக குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிரடியாக சோதனை செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News