உள்ளூர் செய்திகள்

லலிதாம்பிகை நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்

Published On 2022-06-22 14:31 IST   |   Update On 2022-06-22 14:31:00 IST
  • சேலம் மாவட்ட லலிதாம்பிகை நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கலாம்.
  • துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார்.

சேலம்:

சேலம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு-2 துணை போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சேலம் அல்லிக்குட்டை மன்னார்பாளையம் பிரிவு நரசிம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைராஜ். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 42). இவர் சேலம் சின்னகடைவீதியில் உள்ள லலிதாம்பிகை என்ற பெயரில் இயங்கி வந்த நகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் நகைக்கு பணம் டெபாசிட் ெசய்தால், செய்கூலி சேதாரம் இல்லாமல் நகை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அல்லது அதற்கு 3 சதவீதம் வட்டியுடன் பணம் பெற்றுக்கொள்ளலாம், மேலும் பல்வேறு திட்டங்கள் உள்ளது என கடையின் உரிமையாளர்கள் தங்கராஜ் மற்றும் இவரது மனைவி லலிதா ஆகியோர் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

அதன்பேரில் சரஸ்வதி ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்து 600 லட்சம் டெபாசிட் செய்ததாகவும், இந்த டெபாசிட் தொகை முதிர்வு அடைந்தும் பணமோ, நகையோ திருப்பி தராமல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே சரஸ்வதி கடந்த ஜனவரி மாதம் 25ந் தேதி நகை கடைக்கு சென்று பார்த்தபோது கடை பூட்டுப்போட்டு இருந்தது. இதனால் அவர் அக்கம், பக்கத்தில் விசாரித்தார். அப்போது கடை நிர்வாகத்தினர், பொதுமக்கள் பல பேர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக ெதரிவித்தனர்.

ஆகவே சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் லலிதாம்பிகை நகைக் கடையின் உரிமையாளர்கள் தங்கராஜ், லலிதா ஆகிய இருவர் மீதும் 120 (பி), 406, 420 ஐ.பி.சி உள்ளிட்ட பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனவே மேற்படி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப் பட்ட அனைத்து அசல் ஆவணங்கள், மற்றும் அடையாள அட்டை–யுடன் சேலம் ஜாகீர் அம்மாபாளையம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் அருகே அமைந்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.

Tags:    

Similar News