உள்ளூர் செய்திகள்

குன்னூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகன நிறுத்த தளம்

Published On 2022-09-09 10:17 GMT   |   Update On 2022-09-09 10:17 GMT
  • குன்னூரில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகம்
  • வாகன நிறுத்த தளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது

ஊட்டி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சர்வதேச அளவில் ஊட்டிக்கு அடுத்து புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் அதிகமாக வருவார்கள்.இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குன்னூர் நகரில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை.

இதனால் ஆண்டுதோறும் சீசனில் போக்குவரத்து பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. வர்த்தக நகரமான குன்னூரில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. இதனால், வாகனங்களை நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் பார்க்கிங் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது.

இதனால் குன்னூர் நகரசபை வாகன நிறுத்த பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக 25-வது வார்டு கவுன்சிலர் ஜாகிர்கான் நடவடிக்கையின் பலனாக வண்டிபேட்டை வாகன நிறுத்த தளத்தை சீரமைத்து அதிக வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா ஆலோசனை படி தரை முழுவதும் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுவருகிறது

70 சதவித பணிகள் முடிவடைந்து ஒரு வார காலத்திற்குள் முழுவதும் பணி முடிவடையும். இதே போல் பல வாகன நிறுத்தங்கள் அமைக்க முன்முயற்சிகள் எடுக்க பட்டு வருகிறது.

Tags:    

Similar News