முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை: சட்டசபையை புறக்கணித்த அ.தி.மு.க.
- கடந்த 2 நாட்களாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
- சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை:
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்க இருந்த தமிழ்நாடு அரசு உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.
கூட்டத்தொடரின் 2-ம் நாளான 21-ந்தேதி மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இந்த நிலையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் உரை அளித்த நிலையில் சட்டசபைக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தராமல் முழுவதுமாக புறக்கணித்தனர்.
அதே சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர் ஐயப்பன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரும் சட்டசபைக்கு வந்திருந்தனர். சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.