உள்ளூர் செய்திகள்

சாலையோர பள்ளத்தில் பாய்ந்த வெங்காய லாரி, கிரேன் மூலம் மீட்கப்படும் காட்சி.

பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே 20 அடி பள்ளத்தில் பாய்ந்த வெங்காய லாரி

Published On 2023-04-01 09:13 GMT   |   Update On 2023-04-01 09:13 GMT
  • திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
  • இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

பரமத்திவேலூர்:

வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை கடந்து செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை, பரமத்திவேலூர் காவிரியின் இரட்டை பாலத்தை கடந்தும் செல்கிறது.

ஏராளமான போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், காவிரி பாலம் அருகே பெங்களூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெரிய வெங்காயம் பாரம் ஏற்றி லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் உதவியுடன் கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். லாரி பள்ளத்தில் விழாதபடி தடுத்து, வெங்காய பாரத்தை வேறு லாரிக்கு மாற்றினர். அதன் பிறகு லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

Tags:    

Similar News