உள்ளூர் செய்திகள்
- கொடிசியா அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
- விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(50).
இவர் நேற்று முன்தினம் கொடிசியா அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது.
அந்த கார் எதிர்பாராத விதமாக பாலாஜி மீது மோதியது. இதில் பாலாஜி தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாலாஜியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.