உள்ளூர் செய்திகள்

 நான்கு வழிச்சாலையில் தூக்கில் தொங்கிய வடமாநில தொழிலாளி.

நத்தம் அருகே 4 வழிச்சாலையில் தூக்கில் தொங்கிய வட மாநில தொழிலாளி- கொலையா? போலீசார் விசாரணை

Published On 2022-12-26 11:38 GMT   |   Update On 2022-12-26 11:38 GMT
  • பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சிரங்காட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.
  • நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி செல்லும் 4 வழிச்சாலை உள்ளது. இதில் கோசு குறிச்சி, ஒத்தக்கடை பாலப் பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் அறிவிப்பு பலகை உள்ளது.

இதில் இன்று காலை வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அறிவிப்புப் பலகை போர்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தரையில் கால் தொட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டு கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சிரங்காட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது புகாரின் பேரில் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் தொங்கிய நபர் வைத்திருந்த ஆதார் அட்டையை எடுத்து பார்த்தனர். அதில் இறந்தவர் ராகேஷ் (வயது 31) என்பதும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வந்தது.

இதனையடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து இறந்தவர் எங்கு வேலை செய்தார். எதற்காக இங்கு வந்தார். தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து இங்கு வந்து அவரது உடலை தொங்க விட்டுச் சென்றுள்ளனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News