உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் மருத்துவர்களுக்கு புதிதாக தங்கும் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கப்படும்-அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

Published On 2022-07-11 08:41 GMT   |   Update On 2022-07-11 08:41 GMT
  • குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
  • மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.

குன்னூர்:

குன்னூர் பகுதிகளான இன்கோசர்வ், குன்னூர் நகர மன்ற அலுவலகம் மற்றும் குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? எத்தனை மருத்துவர்கள் உள்ளார்கள் எனவும் ஆய்வு செய்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசுகையில், குன்னூர் அரசு லாரி மருத்துவமனையை மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் தனியார் மருத்துவமனைக்கு இணை–யாக வைத்துள்ளார்கள்.

மாவட்டத்தில் மருத்துவர்கள் குறைவாக உள்ளனர். சம்பந்தப்பட்ட சுகாதா–ரத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். விரைவில் மாவட்டம் முழுவதும் மருத்துவர்களுக்கு புதிதாக தங்கும் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், குன்னூர் சப்-கலெக்டர் தீப விக்னேஷ்வரி, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News