உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
- ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.
- வீட்டில் தனியாக இருந்த பவித்ரா வீட்டில் மரவேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது40) கார்பென்டர். இவரது மகள் பவித்ரா, (20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த சில தினங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் அவரை கல்லூரி விடுதியிலிருந்து, வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பவித்ரா வீட்டில் மரவேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து மகராஜாகடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.