உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய வாகனங்களை படத்தில் காணலாம்.

காவேரிப்பட்டணம் அருகே லாரி உள்பட 3 வாகனங்கள் மோதல்; டிரைவர் படுகாயம்

Published On 2022-07-22 15:02 IST   |   Update On 2022-07-22 15:02:00 IST
  • இன்றுகாலை 6 மணி அளவில் லாரி உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது.
  • விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த நாட்டான் கொட்டாய் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்றுகாலை 6 மணி அளவில் லாரி உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது.

இதில் காவேரிப்பட்டி னத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் கனரக வாகனத்தில் வந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News