உள்ளூர் செய்திகள்

வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்திய காட்சி.

கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து உரிய நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

Published On 2022-06-24 09:06 GMT   |   Update On 2022-06-24 09:06 GMT
  • கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து உரிய நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
  • எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் பது குறித்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர்: 

கடலூர் அருகே எம்.புதூர் பட்டாசு ஆலைவெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், படுகாய மடைந்தவர்களுக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் பது குறித்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிமம் பெற்று பட்டாசு ஆலை இயங்கியதா?, உரிமம் இன்றி இயங்கி யதா? என்பது குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News