உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில்கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-26 13:34 IST   |   Update On 2023-04-26 13:34:00 IST
  • சட்ட விரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
  • கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

நாமக்கல்:

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் தாலுகா, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அப்பகுதியில் சட்ட விரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் நாமக்கல் மாவட்ட வி.ஏ.ஓ.க்கள் சங்கம் சார்பில், நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி லட்சுமிநரசிம்மன் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தூத்துக்குடியில் வி.ஏ.ஓ.வை தாக்கியவர்களை உடனடியாக கொலை குற்ற வழக்கில் கைது செய்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். தமிழக அரசு பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி னார்கள்.

Tags:    

Similar News