உள்ளூர் செய்திகள்

நாமக்கல் கமலாலய குளத்தில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் போலீசாருக்கு பயிற்சி அளித்த போது எடுத்த படம்.

நாமக்கல்லில் போலீசாருக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி

Published On 2023-08-18 09:43 GMT   |   Update On 2023-08-18 09:43 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
  • போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

நாமக்கல்:

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிதல், தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மேலாண்மை மீட்புக்கு ழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

போலீசாருக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்து ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

3 நாட்கள்

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியை அதிரடி கமாண்டோ படை சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழங்கி வருகிறார். இப்பயிற்சியில் 25 பெண் போலீசார் உள்பட 60 போலீசார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News