உள்ளூர் செய்திகள்

ஆனங்கூரில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம். 

பரமத்திவேலூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-07-17 06:40 GMT   |   Update On 2023-07-17 06:40 GMT
  • பொது மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.
  • இந்த கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமை வகித்து பொதுமக்களிடம் பேசினார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர், கரபாளையத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த மார்ச் 11-ல் படுகொலை செய்யப்பட்டார்.இதையடுத்து, பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகு திகளில் தீ வைப்பு, குளத்தில் விஷம் கலப்பது, மரங்களை வெட்டி சாய்ப்பது போன்ற அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், அந்த பகுதியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உத்தரவின் பேரில் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கியமான சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஆனங்கூர், பாகம்பாளையம், அய்யம்பாளையம் பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமை வகித்து பொதுமக்களிடம் பேசினார்.

அப்போது, பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் தேவையற்ற சம்ப வங்கள் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளி களை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

பொதுமக்களாகிய நீங்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலும். நீங்கள் வீட்டில் இருக்கும் போதும் அல்லது வெளியில் செல்லும்போதும், ஏதாவது ஒரு வகையில் குற்றவாளிகள் குறித்து தகவல் கிடைக்கலாம். அந்த தகவலை உடனடியாக காவல்துறையினிடம் தெரிவிக்க வேண்டும்.

அப்போது தான் இனி வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் செய்ய முடியும் என்றார். மேலும், ஒவ்வொரு நாள் இரவும், ஒவ்வொரு ஊரில் இருந்தும் தினமும் 10 இளைஞர்கள் போலீசாருNamakkal District News,டன் இணைந்து இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக் கொண்டார். அதற்கு போலீசார் உடன் இணைந்து ரோந்தில் ஈடுபடுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News