உள்ளூர் செய்திகள்

வடுகப்பட்டி ஊராட்சி, வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு பாதைவசதி கேட்டு தாதவராயன் குட்டை புதுகாலனி அருந்ததியர் தெரு மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடுகப்பட்டியில் பாதை வசதி கேட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2023-07-25 13:48 IST   |   Update On 2023-07-25 13:51:00 IST
  • 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
  • மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

சங்ககிரி:

சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், வடுகப் பட்டி ஊராட்சி, தாதவராயன்குட்டை கிராமம், புதுகாலனி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதனையடுத்து, அங்கு வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர். அதனையடுத்து, நேற்று மதியம் 15 குடும்பத்தினரும் வடுகப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வே செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து, மக்கள் சங்ககிரி வந்து ஆர்.டி.ஓ., லோகநாயகியிடம் புகார் அளித்தனர். அப்போது அவர், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அளவீடு செய்யும் வரை விவசாய நில உரிமையாளர்கள் தடுக்க கூடாது என உத்திரவிட்டார். அதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News