உள்ளூர் செய்திகள்

புதிய போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன்.

நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்- புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

Published On 2023-04-10 09:03 GMT   |   Update On 2023-04-10 09:03 GMT
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
  • கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் ஆனதையடுத்து புகார் கூறப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.

புதிய எஸ்.பி. நியமனம்

தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் இன்று காலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். உளவுத்துறையின் அறிக்கை யின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை 9498101775 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News