உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி. அருகில் சண்முகையா எம்.எல்.ஏ. உள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2023-04-10 14:25 IST   |   Update On 2023-04-10 14:25:00 IST
  • தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தி.மு.க. ஆட்சியில் அதிகமான திட்டங்கள் பெண்களுக்குதான் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது, ஸ்பிக்நகர் பகுதி செயலாளரும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனுமான ஆஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தி.மு.க. உறுப்பினர்களாக 1½ கோடி பேர் உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் அதிகமான திட்டங்கள் பெண்களுக்குதான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலும் கூட நீங்கள் தான் அதிகமாக உள்ளீர்கள்.

அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. பஸ் பாஸ் இலவசம், எந்த திட்டத்தை எடுத்தாலும் உங்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள பெண்கள், கல்வியை படித்து முடித்தால் அந்த குடும்பமே வளர்ச்சி அடையும்.

பெரியார், அண்ணா கொண்டு வந்த பெண்களுக்கான திட்டங்களை கருணாநிதி ஆட்சியில் சட்டமாக கொண்டு வந்தார். புதிய உறுப்பினர் சேர்க்கையில் அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை அவசியம் இணைக்க வேண்டும். அதே போல் பூத் கமிட்டியிலும் முறையாக தி.மு.க தலைமை கேட்டுக் கொண்டபடி உண்மையான முகவரியுடன் அதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தவறு இருந்தால் முதல்-அமைச்சர் அதை நீக்கி விடுவார். இன்னும் ஓரு வருட காலத்தில் எம்.பி. தேர்தல் வர உள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும்.

சாதி, மதத்தை கூறி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் ஒன்றிய அரசின் திட்டம் தமிழகத்தில் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த பூமி. மக்கள் பணிதான் மகேசன் பணி என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பனியாற்றி வரு கிறார். அவருக்கு நாம் அனை வரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் பூங்குமார், ரகுராமன், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் வி.பி.ஆர். சுரேஷ், குலையன்கரிசல் நீர்பாசன விவசாய சங்க தலைவர் ஜெகன், ஒன்றிய துணைச் செயலாளர் ஹரிபால கிருஷண்ன, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் நிர்மல் சிங், வெற்றிவேல், குரு,

வட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், வசந்தி பால்பாண்டி, மைக்கேல், கருப்பசாமி, நிர்வாகிகள் பாலமுருகன், கபடிகந்தன், வக்கீல் கிருபாகரன், ஸ்பிக்நகர் பகுதி மாணவர் அணி செயலாளர் ஏ.ஆர். சக்தி, இளைஞர் அணி அருண்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News