உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்த போது எடுத்த படம்.

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

Published On 2022-08-29 08:11 GMT   |   Update On 2022-08-29 08:11 GMT
  • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையானவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர்.
  • தூய்மை பணியாளர்களுக்கு போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மருத்துவ அலுவலர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் கோபிசெட்டி பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோகன்குமார் தலைமையிலான குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையானவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார். முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத பரப்பு ரையாளர்கள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி, மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மருத்துவ அலுவலர் விளக்கமாக எடுத்துரைத்தார். விழிப்புணர்வு காணொளி காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.

Tags:    

Similar News